Saturday, February 8, 2014

ஏன் இந்த வெறுப்பு??

சமீபத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்தார் திருநங்கை சொப்னா. அதில், பாலினம் என்ற இடத்தில் ஆண், பெண் என்று மட்டுமே இருந்ததால், இவரால் அதனை பூர்த்தி செய்ய இயலவில்லை. அதைக் காரணம் காட்டி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது தேர்வாணையம்.இது தொடர்பாக வழக்குப் பதிந்து ஹால் டிக்கட் பெற்று குரூப் II தேர்வும் எழுதினார்.தற்போது  குரூப் IV தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.ஆனால் பணிக்கு செல்லும் இடத்தில் மறுபடியும் இந்தப் புறக்கணிப்பு தொடரும்."மாற்றுப்பாலினத்தவர்கள்" குறித்து நம்மில் பெரும்பாலானோரிடம் தவறான கருத்துகள் நிலவி வருகிறது.ஏன்..

மனிதர்களுக்கே பொதுவான குணம் ஒன்று உண்டு.அது"மனித இனமே இயற்கையின் படைப்பில் உயர்ந்தது என்றும்,தங்களுக்கு நிகராக யாரும் கிடையாது"  என்று.இது எல்லா மனிதர்களின் மனத்திலும் ஆழமாக வேரூன்றி இருக்கும் ஒரு எண்ணம்.இதனால் புதிதாக யாரேனும் தங்களுக்கு நிகராக வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது.அவர்கள் "மாற்றுப்பாலினத்தவரையும்" தங்கள் இனத்தவர் என்றுப் பாராமல்,ஏதோ மனித இனத்தைப் போன்று இயற்கையை எதிர்த்து புதியதாகத் தோன்றியவர்கள் என்றுப் பார்ப்பது தான் இதற்கு காரணம்.இது வரை "ஆண்...பெண்" என்று இரு பாலினம் மட்டுமே வழக்கத்தில் கொள்ளப்பட்டுவந்தது...மூன்றாவது பாலினத்தவரையும் வழக்கத்தில் கொண்டால் "தங்களின் முக்கியத்துவம் கேள்விக்குறியாக்கப்படும்" என்ற  பயம் தோன்றுவதால் மாற்றுப்பாலினனத்தவர்களை ஒதுக்குகின்றனர். இதனால் இவர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள் என்று கூறி புறக்கணிக்கப் பார்க்கின்றனர்.

.கடந்த காலங்களிலும் மாற்றுப்பாலினத்தவர்  இருந்து வந்துள்ளனர்.ஆனால் தன் உடலில்/மனதில் நிகழும் மற்றும் இன்னவென்று அவர்களுக்கு தெரியவில்லை.அல்லது தங்களை "மாற்றுப்பாலினத்தவராக" அடையாளப்படுத்தினால் அவர்களை மனப்பிறழ்வு உடையவர் என்றும் தண்டனைக்குரியவர் என்று குற்றும் சுமத்தப்பட்டதால் அவ்வாறு தங்களை அடையாளப்படுத்துவதைத்  தவிர்த்து வந்தனர்.அனால் தற்போதுள்ள நிலையில் தங்களை "மாற்றுப்பாலினத்தவர்" என்று அடையாளப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை.அவர்கள் சமீபமாய் தங்களை "மாற்றுப்பாலினத்தவர்" என அடையாளப்படுத்துவதை மற்றவர்கள் "இயற்கையை எதிர்த்து புதியதாய் தங்களை வடிவமைக்க நினைக்கிறார்கள்" என்று அவர்களை எதிர்கிறார்கள்.
மேலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டும் என்பதால் திட்டமிட்டே அவர்களை தவறாக சித்தரிகிறார்கள்.

மனித இனம் தோன்றிய காலம் தொட்டே "மாற்றுப்பாலினத்தவர்கள்" இருந்து வருகிகிறார்கள்..மகாபாரதத்தில் அர்ஜூனன் ஒருஆண்டு காலம் அரவாணியாக வாழ்ந்ததாகவும் பீஷ்மரைக் கொல்ல வரும் சிகண்டி என்கிறக் கதாப்பாத்திரமும் உண்டு.இப்படி ஏராளமான சான்றுகள் கூறமுடியும்.அதுபோல இது மன்னப்பிறழ்வு அல்ல என்பது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களிடையே "மாற்றுப்பாலினத்தவரை" பற்றிய தவறான புரிதலை அகற்ற முறையான விழிப்புணர்வு தேவை.அறிவியல் பாடங்களில் மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடங்களை பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும்.
இடைவிடாத போராட்டம் மற்றும்  சரியான விழிப்புணர்வு மூலம் மட்டுமே மாற்றுப்பாலினத்தவர்கள்  தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.அதற்கான முதல் நகர்வு தான் "சொப்னா குரூப் தேர்வில் தேர்ச்சி பெற்றது.

- வேனிற்கோ

No comments :

Post a Comment