Showing posts with label வேனிற்கோ. Show all posts
Showing posts with label வேனிற்கோ. Show all posts

Monday, April 7, 2014

பல நாள் திருடன்


இரவிலும் பிரச்சாரம் செய்யலாம் என்ற தேர்தல் கமிஷன்   அனுமதிக்கு பிறகு மேலும் முனைப்போடு இரவு பகல் என்று பாராமல் பிரசாரங்களில் பரபத்துக்கொண்டிருகின்றன எல்லா அரசியல் கட்சிகளும்.இந்த பரபரப்பான சூழலில் "பழைய கிழவி கதவத் திறடி" என்பது போல் பழைய பிரச்சனை ஒன்றை தூசி தட்டி எடுத்து பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ கும்பக்களின் முகத்திரையை கிழித்துத்  தொங்க விட்டுள்ளது ஒரு இணையதளம்.
1992ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை "ஆபரேஷன் ஜன்மபூமி" என்ற ஸ்டிங் ஆபரேஷன் மூலம் ஆதரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளது "கோப்ரா போஸ்ட்" இணையதளம்.
அயோத்தி இயக்கம் என்கிற தனது புத்தகத்தின் ஆராய்ச்சி சம்மந்தமான ஆசிரியர் போல் தன்னை காட்டிக்கொண்டு, கோப்ராபோஸ்ட் இணை ஆசிரியர் கே ஆஷிஷ் உ.பி. , ஜெய்ப்பூர் , அவுரங்காபாத், மும்பை மற்றும் குவாலியர் அயோத்தி , பைசாபாத் , கோவில்களுக்கு , லக்னோ, கோரக்பூர் , மதுரா, மொராதாபாத் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து யார் பாபர் மசூதி இடிப்பு ஆபரேஷனில் பங்குகொண்ட அந்த 23 பேரிடம் நேர்காணல் நடத்தி இரகசியமாக அவர்களின் உரையாடல்களை பதிவு செய்தார்.
பாபர் மசூதி வழக்கை விசாரித்த லிபேரன் கமிஷன் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட 68 பேரில் இந்த 23 பேரும் அடக்கம்,அந்த 23 பேரின் விவரம் சம்பத் ராய் பன்சல்,ராம்ஜி குப்தா,பிரகாஷ் ஷர்மா,ரமேஷ் பிரதாப் சிங்,வினய் கடியார் ,ஜைபான் சிங் பவேயா,தரமென்ற சிங் குர்ஜாஅமர், பி.எல்.ஷர்மா பிரேம்,பிரிஜ் பூஷன் ஷரன் சிங்,சாத்வி உமா பாரதி, கல்யாண்  சிங்,லல்லு சிங்,ஜெய் பகவான் கோயல்,பவன் பாண்டே, சந்தோஷ் துபே,சதீஸ் பிரதான்,மோரேஷ்வர் சாவே,சுவாமி சச்சிதானந்த்  சாக்ஷி மகாராஜ்,மகந்த் ராம் விலாஸ் வேதாந்தி,சாத்வி ரிதம்பரா,மகந்த் அவைத்யானத்,ஆச்சார்யா தர்மேந்திரா சுவாமி ரித்ய கோபால் தாஸ். 

கோப்ரா போஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளி வந்துள்ள திடிக்கிடும் தகவல்கள்:

பாபர் மசூதி இடிப்பு ஏதோ உணர்சிகரமான சம்பவம் அல்ல திட்டமிட்டு சங்க பரிவார் ஆட்களை முன்னாள் ராணுவ அதிகாரிகள் மூலமாக பயிற்சியளித்து பாபர் மசூதியை இடித்துள்ளனர்.

இதற்கு தனியே தற்கொலைப் படையினரையும் உருவாக்கியுள்ளனர்.

ஒரு ராணுவப் பயிற்சிக்கு இணையாக உயரமான கட்டடங்களில் ஏறுவதற்கு,ஆயுதங்களைக் கொண்டு கட்டிடத்தை இடிப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

உளி,சுத்தியல்,கடப்பாரை உள்ளிட்ட கட்டடங்களை இடிக்கத் தேவையான பொருட்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பப்பட்டன.

எல்லா முயற்சியும் தோல்வியில் முடிந்தால்  "டைனமைட்டை" வைத்து தகர்க்க ஏற்ப்பாடுகள் தயார் நிலையில் இருந்தது.

பத்தடமான சூழ்நிலையை தக்க வைக்க அயோத்தியில் முன்னமே கலவரத்திற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு சில உயிர்கள் பலியாவதையும் திட்டமிட்டிருந்தனர்.

இடித்து தரைமட்டமாக்கப்பட வேண்டும் என்ற முடிவோடு கட்டிடக்கலை வல்லுனர்கள் மற்றும் பொறியாளர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் பேரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

உ.பி முதல்வர் கல்யாண் சிங் மற்றும் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவிற்கு பாபர் மசூதி இடிக்கப்பட உள்ளது முன்னரே தெரியும்.

வினய் கட்டியார்,எல்.கே அத்வானி,உமா பாரதி,ஹச்.வ. சேஷாத்ரி உள்ளிட்ட பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கலந்து கொண்ட ரகசிய கூட்டம் ஹனுமான் பாகில் நடத்தப்பட்டது.

பாபர் மசூதியில் கண்டெடுக்கப்பட்ட ராமர் சிலை அதிசயமான நிகழ்வு அல்ல,முன்னரே திட்டமிட்டு பல வருடங்களுக்கு முன் பாபர் மசூதியில் புதைக்கப்பட்டு பின்னர் எடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்டவர்களே தங்கள் வாயால் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளதால் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.இதில் பெரும்பாலானோர் பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவான ஆர்.எஸ்.எஸ் என்பதால் தேர்தல் நேரத்தில் இது அவர்களுக்கு பெரும் பின்னடைவைத் தரக்கூடும்.
கோப்ரா போஸ்ட்டை தடை செய்யக் கூறி எலக்ஷன் கமிஷனிடம் புகார் அளித்துள்ளது பா.ஜ.க.ஆனால் வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது.சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல இது பரவி வருகிறது.பா.ஜ.க எதிர்பாராத கடைசி நொடி தாக்குதல் இது.
அதன் செல்வாக்கு சரிவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
-  வேனிற்கோ

Saturday, March 8, 2014

நெற்றிக்கண்

சென்னை சிறுசேரி டி.சி.எஸ் வளாகத்தில் கடந்த மாதம் உமா மகேஸ்வரி என்னும் இளம் பெண் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார்.குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.சட்டம் தன கடமையை செய்தது.
இதையொட்டி எழுந்த விவாதத்தில் பெரும்பாலான ஆண்கள் முன்வைத்த குற்றச்சாட்டு "ஆறு மணிக்கு மேல ஒரு பொம்பளப் புள்ள ஏன் வெளியப் போகணும்,ஆம்பளைக்கு சமமா நாங்களும் வேலை பார்ப்போம்ன்னு  போன இப்படிதான் ஆகும்".சில கம்பனிகளும் இந்த சம்பவத்தை தொடர்ந்து 
பெண்களின் வேலை நேரத்தை குறைத்து ஆறு மணிக்கே அவர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தது.
"இரவில் மட்டும்தான் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்களா என்ன??இரவு என்பது பெண்களுக்கு தடை செய்யப்பட்ட ஒரு நேரமா என்ன???...இரவை ரசிக்க...இரவில் பயணிக்க அவர்களுக்கு உரிமையில்லையா என்ன??....ஆண்கள் தானே கற்பழிக்கிறார்கள்..அப்படி என்றால் ஆண்கள் இனி மாலை ஆறுமணிக்கு மேல்/இரவில் வெளியே வரக்கூடாது.பெண்கள் இரவில் வரலாம் என்று சட்டம் போட வேண்டியாதுதானே.சும்மா இருப்பார்களா நம் ஆண்கள்?உடனே "உரிமை" அது இதுன்னு கொடி பிடிப்பார்கள்...தங்களுக்கு ஒரு நியாயம்,ஊருக்கு ஒரு நியாயமா..குற்றம் செய்தவனை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்லும் அழுக்கு படிந்த மனநிலை நமது...

அசாம் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ராகுல் காந்திக்கு முத்தமிட்ட பெண் கவுன்சிலரை அவரது  கணவரே எரித்து கொலை செய்துள்ளார்.
முத்தமிடுதல்,கட்டிப்பிடித்தல்,பைக்கில் ஆணோடு பயணம் செய்தல்,ஆணோடு நட்புறவோடு பழகுதல் போன்றவை என்ன பாவச்செயல்களா??...இதனால் கற்பு பொய் விடுமா???,...கற்பு என்பது ஆண்களைப் பொருத்தவரை "அடங்கி நடத்தல்" என்பதா???...கட்டிப்பிடித்தால்,முத்தமிட்டால் கற்பு போய்விடும் என்று கருதுவதை விட மூடத்தனம் என்னவாக இருக்க முடியும்???...கற்பு என்ற ஒன்றே கிடையாது...அப்படி இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டுமல்லவா???.ஆண்களுக்கு என்று கட்டுப்பாடு எதுவும் கிடையாது.ஆண்கள் என்ன வேண்டுமானலும் செய்யலாம்...ஆனால் பெண்கள் செய்யும் செயல்களை "கற்பு,பத்தினி" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இவர்கள் கட்டுப்படுத்துவார்களாம் ...கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல...அது மனம் தொடர்புடைய விஷயம்...

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் பெண்களும் சக பெண்களை இதே அளவுகோல்களை வைத்து அளவிடுவதுதான்.பெண்களுக்கு நம் உரிமைகள் பறிபோகிறது என்பதே புரிவதில்லை.கணவனுக்கு,பெற்றோருக்கு செய்யும் தொண்டு,தியாகம்,பாசம்,நேசம்,காதல் என்று கூறி அதை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.முதலில் பெண்கள் தங்களுக்கான உரிமைகள் எதுவென்றுப் புரிந்துகொள்ளல் வேண்டும்.பின் தங்களுக்கான உரிமை மீட்கும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடல் வேண்டும்.
ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் எனவோ...பெண்கள் உயர்ந்தவர்கள் எனவோ நிரூபிக்க யாரும் பிறப்பெடுக்கவில்லை.இருவரும் ஒன்றிணைந்து ஒருவரையொருவர் சமமாக நடத்தி வாழும் வாழ்வே அர்த்தம் பொதிந்தது.
-வேனிற்கோ

Saturday, February 22, 2014

களம்

கடந்த 2009ஆம் ஆண்டு சட்ட விரோதமாக மான்சி என்ற பெண்ணை படுக்கையறை வரை உளவு பார்த்த விவகாரத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்ட  செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அவர் யாருக்காக உளவு பார்த்தார்???
அவரது தொலைபேசி உரையாடல்களில் "சாஹேப்" என்று அடிக்கடி குறிப்பிடுகிறார்.அந்த "சாஹேப்"க்காக அல்லது அந்த சாஹேபின் கட்டளையின் பேரில் தான் இந்த உளவு வேலையை அவர் மேற்கொண்டிருப்பார் என்பது அந்த தொலைபேசி உரையாடல்களின் மூலம் தெளிவாகிறது.
2004இல் 24வயதாக இருந்தபோது மோடிக்கு நன்கு பரிச்சயமானவர்தான் இந்த மான்சி.அரசின் அழகுபடுத்தும் திட்டங்கள் பலவற்றிற்கான வடிவமைப்பாளரும் அத்தகைய திட்டங்களின் ஒப்பந்தங்களைப் பெற்றவராக இருந்தார் மான்சி.
ஆரம்பத்தில் இது போன்ற வெறும் யூகங்களின்  அடிப்படையில்தான் அந்த "சாஹேப்" என்று அழைக்கப்பட்டவர் "மோடி" தான் என்று கூறப்பட்டுவந்தது.ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை "நேரங்கெட்ட நேரத்தில் என் மகள் வெளியில் நடமாட வேண்டியிருக்கும் என்பதால் எனது மகளைக் கவனித்துக் கொள்ளும்படி எனது குடும்ப நண்பரான நரேந்திர மோடியிடம் வாய்மொழி வேண்டுகோள் வைத்தேன்" என்று கூறியது அது "மோடி" தான் என்பதை உறுதிப்படுத்தியது. 

ஆனால் வெளியாகியுள்ள 267 தொலைபேசி உரையாடல்களைக் கேட்கும் போது,ஒரு பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்தொடர்வது போல் அல்லாமல் அந்தப் பெண் மூலம் வேறு ஏதோ ஒன்று நடந்து விடாமல் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் போல உள்ளது.

இதற்கு பா.ஜா.க தரப்பில் அளிக்கப்பட விளக்கம்"அந்தப் பெண் ஒரு கிழவனை(ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷர்மா) லவ் பண்ணியதால்தான் அந்தப் பெண்ணை பாழுங்கிணற்றில் இருந்து காப்பாற்ற தான் மோடி அவ்வாறு செய்தார்" என விளக்கம் கொடுத்தனர்.ஒரு குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்ற தனது ஒட்டுமொத்த உளவுப் படையையே மோடி முடுக்கிவிட்டுள்ளார் என்பது ஏற்புடையதாக இல்லை.பதிவான தொலைபேசி உரையாடல்களில் மோடி தரப்பில் தொனிக்கும் பரிதவிப்பும்,கோபமும் அவர்களின் பதட்டத்தை காண்பிக்கிறது.குடும்ப மானத்தைக் காப்பாற்ற ஏன் பதட்டம் அடைய வேண்டும்???

அந்த 267 தொலைபேசி உரையாடல்கள் மூலம் மான்சிக்கும் மோடிக்கும்  இடையேயான நெருக்கம் பற்றி நாம் அறியமுடிகிறது.மான்சி வேறு யாருடனோ பழகுவதைக் கண்காணிக்கவே இந்த உளவு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.அவர் எங்கு செல்கிறார்,என்ன செய்கிறார்,யாருடன் பேசுகிறார் என மான்சியின் அத்தனை அசைவுகளும் உளவு பார்க்கப்பட்டன.இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தன்னை பாதிக்கும் விஷயம் இதில் அடங்கியிருந்ததால்தான் மோடி இதில் அதிக கவனம் செலுத்தினார் என்பது புலப்படுகிறது.
மோடி தன் சுயலாபத்திற்காக அரசு இயந்திரங்களை துஷ்பிரோயகம் செய்துள்ளது வெட்டவெளிச்சமாகிறது.

குஜாராத் போலி என்கௌண்ட்டர் அடுத்தவாரம்...
-  வேனிற்கோ

இலக்கை நோக்கி..

உறுதியான ஆன்மாக்களுடைய சிறு குழுகூடத் தங்களது நோக்கத்தின் மீது தீராத நம்பிக்கை வைத்திருக்குமானால்,அக்குழுவினரால் வரலாற்றை மாற்ற முடியும்"
-காந்தி 
"அஹிம்சை தான் நமது வழிமுறை என்றால்,எதிர்காலம் பெண்களிடம் தான் இருக்கிறது.ஒரு பெண்ணைத்தவிர வேறு யாரால் இதயத்தைத் தொடும் வலுவான கோரிக்கையை முன்வைக்க முடியும்???"
-காந்தி 
மேற்குறிய காந்தியின் வாக்குகளை மெய்யாக்கி சுமந்து கடந்துள்ளது இந்த வாரம்.

உரிமைக்கான போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மக்கள்போராட்டம் எத்தகைய வலிமையுடையது என்பதையும் பறைசற்றும்விதமாக இந்த வாரத்தின் சில நிகழ்வுகள் அமைந்தது.இந்திய அரசியல் வரலாற்றில் இது முக்கியமான் வாரம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்குமான தூக்கு தண்டனை ரத்து,ராஜீவ்  கொலை வழக்கில் கைதான ஏழு பேர் விடுதலை..தெலுங்கானா மசோதா நிறைவேற்றம் போன்ற நிகழ்வுகள் இந்த வாரம் வரலாற்று சிறப்புக்கு உரியதாகிறது.தூக்கு தண்டனை ஒழிப்பில் ஒரு முக்கிய நகர்வு இது.
இந்த வெற்றி சாதாரணாமாக கைக்குக் கிட்டவில்லை பலவருட தொடர்  போராட்டங்கள்,உயிர் தியாகங்கள் மூலமே கிட்டியது.மேலும் "அற்புதம்மாள்" என்ற அந்த அற்புதப் பெண்மணி 23 ஆண்டுகளாக தன் மகனுக்கு நீதி கேட்டு நடத்திய அஹிம்சைப் போராட்டம் உலகின்  தலை சிறந்த போராட்டங்களுள் ஒன்றாகும்.
பொய்யான குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டு செய்யாத குற்றத்திற்காக 23 ஆண்டுகள் சிறையில்வாடும் அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் வர்மா கமிஷன்,ஜெயின் கமிஷன் அறிக்கைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது,அந்த கமிஷனால் குற்றவாளிகள் என சந்தேகிக்கப் பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி சில தினங்களுக்கு முன்னர் வாக்குமூலத்தை தாம் சரியாக பதிவு செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.இப்படி பல ஓட்டை உடைசல்கள் இருக்கும் இவ்வழக்கை மீண்டும் விசாரித்து உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

தெலுங்கானா போராட்டமானது .ஐம்பது வருடங்களுக்கு மேல் நடக்கும் உரிமைப் போராட்டம்.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தபோதிலும் ஆந்திரா மாநிலத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த பகுதியாகவே தெலுங்கானா இருந்தது.அவர்கள் பெரும் சோம்பேறிகள், அவர்களின் தாய்மொழி தெலுங்குஅல்ல, அவர்கள் முட்டாள்கள், அவர்கள் கிரிமினல்களும்கூட, அவர்களுக்கு படிப்பே வராது, அவர்கள் கலாச்சாரமற்றவர்கள்  - தெலுங்கானா மக்கள் குறித்து ஆந்திராவின் மற்ற பகுதி மக்களின் கருத்து இதுதான்.இப்படி உளவியல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர் தெலுங்கானா மக்கள்.
வேலைவாய்ப்பு ஒதுக்கீடு என எல்லாவற்றிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தார்கள்.பெரும் வளர்ச்சியடைந்த நகரமான ஹைதராபாத்தை தன்னகத்தே கொண்டும் தொடர்ந்து  புறக்கணிப்புக்கு ஆளாக்கப்பட்டு வந்தது தெலுங்கானா.இப்போது தெலுங்கானா உருவாவதை எதிர்ப்பவர்கள் "பிரிவினையை விரும்பாதவர்கள் எல்லாம் இல்லை" எங்கே ஹைதராபாத் தெலுங்கான பக்கம் போய்விடுமோ என்ற பயத்தில்தான்.
தெலுங்கானாவின் உணவுப் பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், சடங்குகள் வேறாக இருந்தன மேலும்  புறக்கணிப்பு இப்படி ஆந்திராவிலிருந்து வெளியேற அவகளுக்கு பல்வேறு நியாயமான காரணங்கள் இருந்தன.இப்போது தெலுங்கானா உருவாதற்கான மசோதா நிறைவேறியுள்ளது அவர்களின்  தொடர் போராட்டங்களே காரணம்.

இந்த இரு போராட்டங்களும்  முடிவுக்கு வந்துவிட்டதாக கூறமுடியாது.அவர்களுக்கு முழு வெற்றி கிட்டிவிட்டதாகக் கூற முடியாது.ஆனால் அவர்களது போராட்டத்தில்  இது ஒரு இமாலய நகர்வு.தங்களது வெற்றிப்படிக்கட்டில் அவர்கள் முன்னேறுவதற்கான உத்வேகத்தை இது கொடுக்கும்.இன்னும் பல தடைகள் அவர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.ஆனால் இதே முனைப்போடு ஒன்றிணைந்து போராடினால் வெற்றி வெகு தூரமில்லை.

  -வேனிற்கோ

Saturday, February 15, 2014

களம்

நரேந்திர மோடி தன்னைப் பிரபலமாகிக் கொள்ளவும் தன்னுடைய குற்றங்களை மறைக்கவும் இணையதளத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
குஜராத்தில் இருக்கும் நாடியாத் நகரத்தில் 6,200 இளைஞர்கள் மோடியால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணி "இணையத்தில் மோடியைப் பற்றிய உண்மைகளை மறைத்து,அவரைப் புகழ்ந்து பொய்களைப் பரப்புவது" தான்.மோடியைப் புகழ்ந்து பொய்களைப் பரப்புவது,அதை எதிர்ப்பவர்களை அவதூறு செய்வது ஆகியவைதான் இவர்களின் பணி.

மோடியை டுவிட்டரில் 10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.இதை வைத்து "இளையதலைமுறையினர் மோடி பக்கம்தான்" என்கின்றனர்.
பிரிட்டன் நிறுவனம் ஒரு மென்பொருளை உருவாக்கியிருந்தது அதன் பெயர் பேக்கர் ஆப்.இணையத்தில் போலியான நபர்களைக் கண்டுபிடிக்கும் மென்பொருள்.இதைப் பயன்படுத்தி மோடியின் அக்கவுன்ட்டை ஆராயும் பொது அந்த பத்து லட்சம் பேரில் 51% பேர் பேக்(போலி) மேலும் 36% பேரின் அக்கவுண்ட் இயங்கவேயில்லை என்பதும் தெரியவந்தது.ஆக பின்தொடரும் 10லட்சம் பேரில் 87% போலியான அக்கவுன்ட்கள்.
மோடியைப் பிரபலப்படுத்தும் பொறுப்பு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதன் பெயர் ஆப்கோ.இது ஒரு அமெரிக்க நிறுவனம்.ஜார்ஜ் புஷ் இதே போல் தன்னைப் பிரபலமாக்க,விளம்பரப்படுத்த அவருக்கு இந்நிறுவனம்தான் உதவியது.
மாதம் 25,0000 டாலர் அந்த நிறுவனத்துக்குக் கட்டணம்.மோடி என்ன டிரஸ் செய்ய வேண்டும்,எப்படி பேச வேண்டும் என்பதில் தொடங்கி,பொய் பிரச்சாரத்திற்கு டிசைன் செய்து கொடுப்பதுவரை அந்நிறுவனத்தின் பொறுப்பு.

மோடியை ஆதரிக்கும்,குஜராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர் என நிரூபிக்கும் இணைய தளங்கள்,அனைத்தும் ஒரே ஐ.பி அட்ரஸில் இருந்துதான் இயங்குகிறது.அனைத்தும் மோடிக்கு ஆதரவான கருத்துகளை பரப்ப உருவாக்கப்பட்டவை 

மேலும் சென்ற வாரம் மோடிக்கு விசா வழங்குவது குறித்து அமெரிக்க யோசிக்கிறது என்ற செய்திக்கு மோடி ஆதரவு இணையதளங்களில் ஒபாமா மோடியின்  உரையை டி.வியில் பார்ப்பதுபோல் ஒரு படத்தை வெளியிட்டார்கள்.சில தினகளுக்கு முன் பி.பி.சி அந்தப் படம் போலியானது என நிரூபித்தது.ஒபாமா "சி.சி.டி.வி"யைப் பார்ப்பது போன்ற புகைப்படத்தை அவ்வாறு எடிட் செய்துள்ளனர்.
இப்படி இணையத்தில் பல "தில்லு முல்லு" வேலைகள் செய்து தான் மோடி பிரபலமடைந்தார்.இதைவிட அதிர்ச்சியான ஒரு சம்பவம் உள்ளது...மோடி குஜராத்தின் உயரதிகாரிகளின்  மூலம் ஒரு பெண்ணை பின்தொடர்ந்தது கண்காணித்தது ...அடுத்த வாரம்..


-  வேனிற்கோ

"ஆம் ஆத்மி" இனி...

"ஆம் ஆத்மி", கடந்த சில மாதங்களாக இந்திய அரசியல் களத்தில் எல்லோரையும் லேசாக பதட்டப்பட வைத்த பெயர்.
ஊழலுக்கு எதிராக "ஆம் ஆத்மி" கையிலெடுத்த துடைப்பம் அவர்களை பரவலாக நாடறியச் செய்தது.இதற்கு முன்னர் இரண்டு முறை ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இயக்கங்கள் நடத்தப்படிருக்கின்றன.

70களில் இந்திரா காந்தியின் அரசாங்கத்திற்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்திய போராட்டம் மக்கள் போராட்டமாக உருப்பெற்று இந்திராவை ஆட்சியிலிருந்து அகற்றியது.80களின் இறுதியில் ராஜீவ் காந்தி அரசாங்கத்திற்கு எதிராக வி.பி.சிங் நடத்திய போராட்டம் மக்கள் போராட்டமாக உருவெடுக்கவில்லை என்றாலும் ராஜீவ் காந்தியை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதைத் தொடர்ந்து  "ஆம் ஆத்மி" கட்சி காங்கிரசின் ஊழலை தொடர்ந்து அம்பலப்படுத்தி ஊழலுக்கு எதிராக துடைப்பம் ஏந்தி தேர்தலில் போட்டியிட்டு டில்லியில் காங்கிரசை தோற்கடித்து இரண்டாமிடம் பிடித்தது.பின்னர் தான் எதிர்த்த காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியையும் அமைத்தது.

புதியதாக தொடங்கப்பட்ட கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பது புதிதில்லை என்றாலும் இந்தியாவின் தலைமையான "டெல்லியைக்" கைப்பற்றி எல்லா அரசியல் கட்சிகள் வயிற்றிலும் புளியைக் கரைத்து மக்கள் முன்னிலையில் "சூப்பர் ஹீரோவாக" "மக்கள் காவலனாக"  உயர்ந்தது.
ஆட்சி அமைத்து 49 நாட்கள் முடிந்த நிலையில்  "ஜன்லோக்பால் மசோதா"வை நிறைவேற்ற முடியாததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கெஜ்ரிவால்.

அவர் ராஜினாமா செய்யாவிட்டாலும் "ஆம் ஆத்மி" கட்சியின் ஆட்சி  விரைவில் முடிவுக்கு வந்திருக்கும்.காங்கிரசின் ஆதரவோடு  ஆட்சியமைத்த பின்னரும் கூட "காங்கிரசின்" ஊழலை அம்பலப்படுத்துவதை நிறுத்தவில்லை,எனவே எப்படியும் தான் கொடுத்த ஆதரவை திரும்பப்பெற்று காலை வாரியிருக்கும் காங்கிரஸ்.
கெஜ்ரிவாலின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே.

"ஊழல் புரையோடியிருக்கும் காங்கிரசின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருந்தாலும் கூட காங்கிரசின் ஊழலை அம்பலப்படுத்துவதை நிறுத்தவில்லை".இந்த நேர்மையே மக்களை வெகுவாகக் கவர்ந்தது.மேலும் "ஆம் ஆத்மி" கட்சி மக்களின் மத்தியில் பலத்த  வரவேற்பைப் பெறக்காரணம் அதன் வெளிப்படைத் தன்மை மற்றும் அடித்தட்டு மக்களையும் கருத்தில் கொண்டு செயல்பட்டது தான்.இப்படி இந்திய அரசியல் கட்சிகள் விரும்பாத அல்லது அவர்களுக்கு பழக்கப்படாத பல விஷயங்களை செய்ததால்தான் ஆம் ஆத்மி மக்கள் செல்வாக்கைப் பெற்றது.

அரசியலில் புதுமைகள் செய்து முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்திருந்தாலும் கூட ஆம் ஆத்மி கட்சி பக்கம் சில குறைகள் உள்ளதையும் நாம் மறுக்கவியலாது.டில்லியில் "ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 20,000லி தண்ணீர் இலவசம்"என்பதையும்,"மின்கட்டணத்தைப் பாதியாகக் குறைப்போம்" என்ற வாக்குறுதியையும் அது நிறைவேற்றியிருக்கிறது.இவ்வாறு  வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றுவதால் மக்கள் பிரச்சனைகள் தீரப்போவதில்லை என்றும்,இதற்கு காரணமான தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமாகவே இது போன்ற பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கும் என்பதையும் ஆம் ஆத்மி புரிந்து கொள்ள வேண்டும்.அதாவது "மற்ற கட்சிகளைப் போல பிரச்சனைக்கான தற்காலிக தீர்வுகளை வழங்காமல்,அதன் ஊற்றுக் கண்களை ஆராய்ந்து அழித்தல் வேண்டும்".
மேலும் சாமானிய மக்களுக்காக போராடும் ஆம் ஆத்மி கட்சியில் இருப்பதோ ஏர் டெக்கன் நிறுவனர் கேப்டன் கோபிநாத்,ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லான்ட் இந்தியா பிரிவின் முன்னாள் தலைவர்  மீரா சன்யால்,இன்போசிஸ் நிறுவன முன்னாள் இயக்குனர் வி.பாலகிருஷ்ணன் போன்ற "பெரும் தலைகள்"தான்.சாமானிய மக்களையும் பங்கெடுக்கச் செய்வதன் மூலம் தான் அவர்களின் குறைகளைக் கண்டறிந்து களைவது சாத்தியப்படும்.

மேலும்,சில நாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் பிரசாந்த் பூஷண் கூறிய "இந்தியாவுடன் சேர்ந்திருப்பதா வேண்டாமா என காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் முடிவெடுக்க வேண்டும்" என்ற கருத்தினை  நிராகரித்து ,"அது பூஷணுடைய தனிப்பட்டக் கருத்து,ஆம் ஆத்மியின் கருத்தல்ல" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.பூஷணின் கருத்து ஆம் ஆத்மியின் ஆதரவாளர்களால் நிராகரிக்கப்படும் என்பதுடன் அக்கட்சியின் செல்வாக்கையே கணிசமாகக் குறைக்கும் என்பதால் கெஜ்ரிவால் அதை நிராகரித்தார்.இது அவர்களின் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குரியதாக்குகிறது.சமூக,பொருளாதார,அரசியல் குறித்த தனது தெளிவான நிலைப்பாடுகளை ஆம் ஆத்மி எடுக்கவேண்டும் மேலும் அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ஆம் ஆத்மியின் டில்லி வெற்றியை ஆம் ஆத்மியே எதிர்பார்த்திருக்க  வாய்ப்பில்லை.தனக்கான கொள்கைகளை வகுக்கும் முன்னரே வெற்றியைச் சுவைத்துவிட்டது.தற்போது ஆம் ஆத்மியின் வளர்ச்சியை  எல்லோரும் உற்று கவனித்து வருகின்றனர். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னரே ஆம் ஆத்மி தனக்கான கொள்கைக் கோட்பாடுகளை உடனே வகுக்க வேண்டியது கட்டாயமாகிறது.இது போன்ற சில குறைகளை களைந்தால் ஆம் ஆத்மி நம்பிக்கைக்குரிய ஒரு மாற்று கட்சியாக உருவெடுப்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

-  வேனிற்கோ

Saturday, February 8, 2014

களம்


நம் எல்லோருக்கும் தெரியும் அமெரிக்க பெரியண்ணனின் கொள்கை என்னவென்று...உலகில் எங்கு என்ன பிரச்சனை என்றாலும் வழிய வந்து  "கட்டப் பஞ்சாயத்து" பண்ணுவது தான் அதன் வேலை "இந்தியாவுக்கு எதிரான அநீதியை பொறுத்துக் கொள்ளமாட்டோம்" என்று ஒரு ஒப்பன் ஸ்டேட்மன்ட் விடுவார்கள்.உடனே இந்தியாவும் நெகிழ்ந்து போய் "அண்ணனுக்கு நம்ம மேல எவ்வளவு பாசம்" என்று நெக்குருகி கண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிடுவார்கள்.அப்புறம் என்ன...அமெரிக்காவுக்கு வாழ்நாள் அடிமையாக வேண்டியதுதான்..ஆனால் இதில் அமெரிக்காவிடம் பாராட்ட வேண்டியது என்னவென்றால் "தங்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் லாபத்தில் பெரிய தலைகளுக்கு பங்கு உண்டு" என்னும் தொழில் தர்மம் தான்.

அமெரிக்கா விற்கும் அணு உலைகளில் பழுது ஏற்பட்டு விபத்து ஏற்பட்டால் அமெரிக்கா பொறுப்பேற்காது..டீசலுக்கு மானியத்தை வெட்டி பெட்ரோலை போல அடிக்கடி டீசலையும் வாராவாரம் விலை ஏற்ற வேண்டும்...தேசியயமக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும்...காப்பீட்டு துறையை தனியார் மயமாக்க வேண்டும்...இப்படி பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு மன்மோகன் தலைமையிலான மத்திய அரசுக்கு அமெரிக்கா கோரிக்கை(ஆணை) வைத்தது .மன்மோகன் இதைத் தாமதப்படுத்தவே கடுப்பான பெரியண்ணன் தற்போது மோடி பக்கம் திரும்பியுள்ளார்.மோடி அடுத்த பிரதமர் ஆக வருவாரா?? என்று உலகளாவிய சர்வே எடுத்தால் அமெரிக்கா தான் "ஆம்" என்ற வாக்குகளை அதிகம் அளித்திருக்கும்...

ஏன் இவர்கள் மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர்??...2002இல் ஈவு இரக்கமின்றி ஒரு பக்டுகொலையை நடத்திவிட்டு எதுவும் நடக்காததுபோல் இருக்கிறாரே யார் இந் ஆள்?? என்று விசாரித்ததில் "மோடி" என பதில் வரவே...புடிடா அவன..நிறுத்துடா தேர்தல்ல..என மோடிக்கு ஆதரவு அளித்துள்ளது.இதற்கு அத்தாட்சியாக அமெரிக்காவின் டைம் பத்திரிகை மோடி படத்தை போட்டு "MODI MEANS BUSINESS" என்று போட்டுள்ளனர்.எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை அடுத்த பிரதமர் யார் என்று இந்தியாவின் 100 முதலாளிகளிடம் எடுத்த சர்வேயில் 74 பேர் "மோடி" என வாக்களித்துள்ளனர்.இவர்கள் ஏன் மோடிக்கு வாக்களித்தனர்???...
ஒரே ஒரு எடுத்துக்காட்டு..
மேற்கு வங்கத்தில் டாட்டாவின் "நானோ"கார் தொழிற்சாலை தொடங்குவதாக இருந்தது.அதை எதிர்த்து விவசாயிகள் போராடினர்.இதை மம்தா பயன்படுத்திக்கொண்டார்.மார்சிஸ்ட்  ஆட்சி கவிழ்ந்து மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார்.தங்களது நிலத்தை டாடாக்கு விற்க முயன்றதால் விவசாயிகள் எதிர்த்தனர்,அதனால் 
மார்க்சிஸ்ட் கட்சி தோற்றது.
உடனே மோடி மேற்கு வங்கத்தில் புத்ததேவ் தருவதாக சொன்ன சலுகைகளை விட அதிகம் தருவதாகக் கூறி டாட்டா ஆலையை குஜராத்தில் தொடங்க இடம் தருகிறார்.விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி 
டாடா தொழிற்சாலைக்கு வழங்கினார் மோடி. 

இப்போது புரிகிறதா ஏன் பண முதலைகள் மோடிக்கு ஆதரவாக உள்ளனர் என்று...
மானேசர் தொழிற்சாலைக்கு இடம் கொடுத்தது,அதானி நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு நிலம் வழங்கியது,ஜியோ குளோபல் நிறுவனத்துக்கு குஜராத் அரசின் எண்ணைக் கிணற்றை  தாரை வார்த்தது..இப்படி மோடியின் "விசுவாசத்திற்கு" சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மோடி ஒரு "டெக்னிக்கலி அப்டேட்டட் திருடன் "...இணையத்தில் அவருக்கு செல்வாக்கு உயர என்னென்ன சித்து வேலைகள் செய்தார் தெரியுமா??
அடுத்த வாரம்..

-  வேனிற்கோ

களம்

2014-நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது...
இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு திருப்பங்களை சந்தித்துள்ள சந்திக்கவிருக்கும் முக்கியமான தேர்தல் இது.
தொடர்ந்து 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சற்றே பதட்டத்துடன் இந்த தேர்தலை எதிர்நோக்கி  நிற்கும் காங்கிரஸ் கட்சி...
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே நாடு முழுவதும் அலையையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நரேந்திர மோடி...
ஊழலை எதிர்த்து துடைப்பம்  தூக்கி நாட்டை சுத்தமாக்குவோம் என்ற முழக்கத்தோடு முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்த "ஆம் ஆத்மி" கட்சி...
அமையுமா..அமையாதா..என வழக்கம் போல் பூச்சாண்டி காட்டிகொண்டிருக்கும்  மூன்றாவது அணி...
என  நமது நாடித்துடிப்பை எகிற வைக்கும் சுவாரஸ்யங்கள்,ஆச்சர்யங்கள்.அதிர்ச்சிகள் இந்த தேர்தலில் அதிகப்படியாகவே உள்ளன..

இந்த தேர்தல் களேபரத்தில் தமிழகத்தின் பங்கும் மற்ற மாநிலங்களுக்கு சற்றும் குறைவில்லாதது,
தே.மு.தி.க உடன் கூட்டணி சேர ஆளாளுக்கு தூதனுப்பி கொண்டிருக்கின்றனர்.ஸ்டாலின்,அழகிரி சண்டை வேறு உச்சத்தை எட்டியுள்ளது.கூடங்குளத்தின் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வேறு விரைவில் தன் அரசியல் நிலைப்பாடை அறிவிக்க உள்ளது.
பழுத்த அரசியல்வாதியான கருணாநிதியையே பதம் பார்த்த தமிழக மாணவர்களின் ஈழப் போராட்டமானது,மாணவர்கள் இந்த தேர்தலில் முடிவின் திசையை தீர்மானிப்பதில் பெரும் பங்கற்றுவார்கள் என்பதை உறுதி செய்துள்ளது.

இப்படி தமிழகமும் தன் பங்குக்கு பரபரப்பை எகிர வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த வேளையில் அரசியில் களத்தில் புகுந்து அகழ்வாராய்ச்சி செய்யவே இந்த பத்தி...
எங்கிருந்து ஆரம்பிக்கலாம்???
ம்ம்ம்ம்...
"வீடு தோறும் மோடி ...உள்ளம் தோறும் தாமரை" என்ற அதிரி புதிரியாக கவித்துவமான வார்த்தைகளோடு பா.ஜ.க சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் நரேந்திர மோடியிடம் இருந்து ஆரம்பிக்கலாம்...

குஜராத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி தான் பெரும்பாலும் மோடியின் பிரச்சாரங்கள் உள்ளது."நான் பிரதமரானால் 60 மாத கால அவகாசத்தில் குஜராத்தை போல் மொத்த இந்தியாவையும் மாற்றிக் காட்டுகிறேன்" என்று சமீபத்தில் ஒரு பொதுகூட்டத்தில் கூறினார் மோடி.

இமாலய வளர்ச்சி..முன்மாதிரி என்றெல்லாம் சொல்கிறார்களே..அப்படி என்னதான் குஜராத் வளர்ச்சி அடைந்துவிட்டது???
உண்மையை ஆராய்ந்தால்...
பா.ஜ.கவினரும் மோடியும் கூறுவது போல குஜராத் மற்றமாநிலங்கள் அளவுக்கு சராசரி வளர்ச்சியை கூட அடையவில்லை...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் 
காஷ்மீரில்-8%
தமிழ்நாட்டில்-17%
குஜராத்தில்-23%
அதாவது சராசரியாக கால்வாசி பேர் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்...

இந்த ஒரு தகவலுக்கே வாயைப் பிளந்தால் எப்படி???
மோடிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிகிறது என்கிறார்களே...
அவரை ட்விட்டெரில்  தொடர்வோர்களில் 87% பேக் ஐடிக்கள்...
நானோ கம்பனிக்காக டாடாக்கு கொடுக்கப்பட்ட நிலம் 1,1000 ஏக்கர்...சதுர அடி 10,000 மதிப்புள்ள நிலத்தை வெறும் 900 ரூபாய்க்கு 
கொடுத்துள்ளார் மோடி...பத்திரப்பதிவுக்கு ஸ்டாம்ப் டியூட்டி கூட கிடையாதாம்...

தொழிற்சாலை துவங்குவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்க தானே செய்யும்..இதில் என்ன குற்றம் கண்டீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்...
இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும்...ஆனால் நிலம் கையகப்படுத்துதலால் 15,000 விவசாயிகள் விவசாயத்தை கைவிட நேரிடும்...

இதை விட பன்மடங்கு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆதாரங்களோடு அடுத்த வாரம்...

-  வேனிற்கோ

ஏன் இந்த வெறுப்பு??

சமீபத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்தார் திருநங்கை சொப்னா. அதில், பாலினம் என்ற இடத்தில் ஆண், பெண் என்று மட்டுமே இருந்ததால், இவரால் அதனை பூர்த்தி செய்ய இயலவில்லை. அதைக் காரணம் காட்டி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது தேர்வாணையம்.இது தொடர்பாக வழக்குப் பதிந்து ஹால் டிக்கட் பெற்று குரூப் II தேர்வும் எழுதினார்.தற்போது  குரூப் IV தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.ஆனால் பணிக்கு செல்லும் இடத்தில் மறுபடியும் இந்தப் புறக்கணிப்பு தொடரும்."மாற்றுப்பாலினத்தவர்கள்" குறித்து நம்மில் பெரும்பாலானோரிடம் தவறான கருத்துகள் நிலவி வருகிறது.ஏன்..

மனிதர்களுக்கே பொதுவான குணம் ஒன்று உண்டு.அது"மனித இனமே இயற்கையின் படைப்பில் உயர்ந்தது என்றும்,தங்களுக்கு நிகராக யாரும் கிடையாது"  என்று.இது எல்லா மனிதர்களின் மனத்திலும் ஆழமாக வேரூன்றி இருக்கும் ஒரு எண்ணம்.இதனால் புதிதாக யாரேனும் தங்களுக்கு நிகராக வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது.அவர்கள் "மாற்றுப்பாலினத்தவரையும்" தங்கள் இனத்தவர் என்றுப் பாராமல்,ஏதோ மனித இனத்தைப் போன்று இயற்கையை எதிர்த்து புதியதாகத் தோன்றியவர்கள் என்றுப் பார்ப்பது தான் இதற்கு காரணம்.இது வரை "ஆண்...பெண்" என்று இரு பாலினம் மட்டுமே வழக்கத்தில் கொள்ளப்பட்டுவந்தது...மூன்றாவது பாலினத்தவரையும் வழக்கத்தில் கொண்டால் "தங்களின் முக்கியத்துவம் கேள்விக்குறியாக்கப்படும்" என்ற  பயம் தோன்றுவதால் மாற்றுப்பாலினனத்தவர்களை ஒதுக்குகின்றனர். இதனால் இவர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள் என்று கூறி புறக்கணிக்கப் பார்க்கின்றனர்.

.கடந்த காலங்களிலும் மாற்றுப்பாலினத்தவர்  இருந்து வந்துள்ளனர்.ஆனால் தன் உடலில்/மனதில் நிகழும் மற்றும் இன்னவென்று அவர்களுக்கு தெரியவில்லை.அல்லது தங்களை "மாற்றுப்பாலினத்தவராக" அடையாளப்படுத்தினால் அவர்களை மனப்பிறழ்வு உடையவர் என்றும் தண்டனைக்குரியவர் என்று குற்றும் சுமத்தப்பட்டதால் அவ்வாறு தங்களை அடையாளப்படுத்துவதைத்  தவிர்த்து வந்தனர்.அனால் தற்போதுள்ள நிலையில் தங்களை "மாற்றுப்பாலினத்தவர்" என்று அடையாளப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை.அவர்கள் சமீபமாய் தங்களை "மாற்றுப்பாலினத்தவர்" என அடையாளப்படுத்துவதை மற்றவர்கள் "இயற்கையை எதிர்த்து புதியதாய் தங்களை வடிவமைக்க நினைக்கிறார்கள்" என்று அவர்களை எதிர்கிறார்கள்.
மேலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டும் என்பதால் திட்டமிட்டே அவர்களை தவறாக சித்தரிகிறார்கள்.

மனித இனம் தோன்றிய காலம் தொட்டே "மாற்றுப்பாலினத்தவர்கள்" இருந்து வருகிகிறார்கள்..மகாபாரதத்தில் அர்ஜூனன் ஒருஆண்டு காலம் அரவாணியாக வாழ்ந்ததாகவும் பீஷ்மரைக் கொல்ல வரும் சிகண்டி என்கிறக் கதாப்பாத்திரமும் உண்டு.இப்படி ஏராளமான சான்றுகள் கூறமுடியும்.அதுபோல இது மன்னப்பிறழ்வு அல்ல என்பது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களிடையே "மாற்றுப்பாலினத்தவரை" பற்றிய தவறான புரிதலை அகற்ற முறையான விழிப்புணர்வு தேவை.அறிவியல் பாடங்களில் மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடங்களை பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும்.
இடைவிடாத போராட்டம் மற்றும்  சரியான விழிப்புணர்வு மூலம் மட்டுமே மாற்றுப்பாலினத்தவர்கள்  தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.அதற்கான முதல் நகர்வு தான் "சொப்னா குரூப் தேர்வில் தேர்ச்சி பெற்றது.

- வேனிற்கோ

Sunday, February 2, 2014

கூடங்குளம் 900

"அன்பிற்குரிய மாலியா மற்றும் சாஷா.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து,அமெரிக்க குழந்தைகளும் இந்திய குழந்தைகளும் பிறநாட்டுக் குழந்தைகளும் ஒன்றிணைந்து நமக்காக அணுஉலைகளும் அணு ஆயுதங்களும் அற்ற ஒரு பாதுகாப்பான உலகைக் கட்டமைப்போம்.உங்களது பெற்றோரிடம் பேசிக் கூடங்குளம் அணு உலையை மூடவும் அமெரிக்கா எந்த ஒரு அணு உலையையும் எங்கள் நாட்டில் தொடங்காதிருக்கவும் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்."
 "அணு உலை மற்றும் அணு ஆயுதங்களைக் கைவிடக்கோரி" முன்பு ஒருமுறை கூடங்குளத்திலுள்ள குழந்தைகள் ஒபாமாவின் குழந்தைகளுக்கு எழுதிய கடிதம் இது.

போராட்டத்தை முறியடிக்க, "காசு வாங்கிக்கொண்டு போராடுகின்றனர்" "பெண்களை முன்னிறுத்தி போராடும் கோழைகள்" என பல பொய்யான மற்றும் நியாயமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது,பொய் வழக்குகள் போடுவது போன்ற கீழ்த்தரமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
இப்படி பல்வேறு இன்னல்களைக் கடந்து இந்தப் போராட்டம் 900 நாட்களை எட்டிவிட்டது.எப்படி???

ஏனென்றால் இது சிறிதும் சுயநலம் கலக்காதப் போராட்டம்.கடிதத்தில் "கூடங்குளம்" திட்டத்தை மட்டும் கைவிடுமாறு அந்தக் குழந்தைகள் கூறவில்லை மாறாக மொத்த உலகையும் அணுத் தீமையில் இருந்து காத்து,நமக்கான ஒரு பாதுகாப்பான உலகைக் கட்டமைப்போம்" என்றுதான் கூறியுள்ளனர்,இந்தப் பொதுநலம் தான் இவர்களது போராட்டத்தினை உறுதியோடு செயல்படவைக்கிறது.
சுயநலமுள்ள போராட்டமாக இருப்பின் சதிகாரர்களின் சூழ்ச்சியில் சிக்கி எப்போதோ சின்னாபின்னமாகியிருக்கும் இந்த போராட்டம்.

இப்படி நேர்மையும்,அறமும் சார்ந்து பொது நலனிற்காக நடத்தப்படும் ஒரு போராட்டம்  900 நாட்களைக் கடந்து மேலும் உறுதியோடு முன்னேறுவதில் ஆச்சர்யமேதுமில்லை.
தங்களது அடுத்த நகர்வாக "தொடர் உண்ணாவிரத போராட்டத்தை"முன்னெடுத்துள்ளனர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் விரைவில் தங்களது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளனர்.கூடங்குளம் பிரச்னையை மட்டும் மனதில் வைத்து தங்களது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றிய முடிவை எடுக்காமல்..."காவேரி,முல்லைப்பெரியார்,ஈழம்,மினவெட்டு,மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் போன்ற அனைத்து முக்கிய பிரச்சனைகளையும்  கருத்தில் கொண்டு தங்களது அரசியல் ஆதரவு யாருக்கு என முடிவு செய்ய வேண்டும்.மற்ற கட்சிகளோடு இணைந்து செயல்படுவதானாலும் சரி ,தனியே புதுக் கட்சி தொடங்குவதானாலும் சரி,மேற்கூறியது போன்ற அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவே  "அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்" அரசியல் எதிர்காலத்தை நம்பிக்கைக்குரியதாக்கும்.

- வேனிற்கோ

Saturday, February 1, 2014

நெற்றிக்கண்

"நெற்றிக்கண்"
எல்லா பத்திரிக்கைகளிலும் " முந்தைய வாரத்தின் முக்கிய செய்திகள்/நிகழ்வுகள்" பற்றியக் கட்டுரைகள் இடம் பெறும் பகுதியைப் போன்றதுதான் இதுவும்.ஆனால் வழக்கமாக உள்ளதுபோல் "செய்திகுறிப்பாக" இல்லாமல் சற்றே நேர்கோட்டிலிருந்து விலகி எல்லாவற்றையும் ஆழமாக,மாறுபட்ட கோணங்களில் ஆராய்வதே "நெற்றிக்கண்ணின்" நோக்கம்.

- வேனிற்கோ

களம்

2014 மக்களவை தேர்தலின் களேபரங்கள்,நிலவரங்கள்,ஆச்சர்யங்கள்,சுவாரஸ்யங்கள்,அதிர்ச்சிகள்,தில்லுமுல்லுகள் ஆகியவற்றை அலசும்,அம்பலப்படுத்தும் "களம்" தான் இது.

-வேனிற்கோ