Saturday, February 8, 2014

களம்

2014-நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது...
இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு திருப்பங்களை சந்தித்துள்ள சந்திக்கவிருக்கும் முக்கியமான தேர்தல் இது.
தொடர்ந்து 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சற்றே பதட்டத்துடன் இந்த தேர்தலை எதிர்நோக்கி  நிற்கும் காங்கிரஸ் கட்சி...
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே நாடு முழுவதும் அலையையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நரேந்திர மோடி...
ஊழலை எதிர்த்து துடைப்பம்  தூக்கி நாட்டை சுத்தமாக்குவோம் என்ற முழக்கத்தோடு முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்த "ஆம் ஆத்மி" கட்சி...
அமையுமா..அமையாதா..என வழக்கம் போல் பூச்சாண்டி காட்டிகொண்டிருக்கும்  மூன்றாவது அணி...
என  நமது நாடித்துடிப்பை எகிற வைக்கும் சுவாரஸ்யங்கள்,ஆச்சர்யங்கள்.அதிர்ச்சிகள் இந்த தேர்தலில் அதிகப்படியாகவே உள்ளன..

இந்த தேர்தல் களேபரத்தில் தமிழகத்தின் பங்கும் மற்ற மாநிலங்களுக்கு சற்றும் குறைவில்லாதது,
தே.மு.தி.க உடன் கூட்டணி சேர ஆளாளுக்கு தூதனுப்பி கொண்டிருக்கின்றனர்.ஸ்டாலின்,அழகிரி சண்டை வேறு உச்சத்தை எட்டியுள்ளது.கூடங்குளத்தின் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வேறு விரைவில் தன் அரசியல் நிலைப்பாடை அறிவிக்க உள்ளது.
பழுத்த அரசியல்வாதியான கருணாநிதியையே பதம் பார்த்த தமிழக மாணவர்களின் ஈழப் போராட்டமானது,மாணவர்கள் இந்த தேர்தலில் முடிவின் திசையை தீர்மானிப்பதில் பெரும் பங்கற்றுவார்கள் என்பதை உறுதி செய்துள்ளது.

இப்படி தமிழகமும் தன் பங்குக்கு பரபரப்பை எகிர வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த வேளையில் அரசியில் களத்தில் புகுந்து அகழ்வாராய்ச்சி செய்யவே இந்த பத்தி...
எங்கிருந்து ஆரம்பிக்கலாம்???
ம்ம்ம்ம்...
"வீடு தோறும் மோடி ...உள்ளம் தோறும் தாமரை" என்ற அதிரி புதிரியாக கவித்துவமான வார்த்தைகளோடு பா.ஜ.க சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் நரேந்திர மோடியிடம் இருந்து ஆரம்பிக்கலாம்...

குஜராத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி தான் பெரும்பாலும் மோடியின் பிரச்சாரங்கள் உள்ளது."நான் பிரதமரானால் 60 மாத கால அவகாசத்தில் குஜராத்தை போல் மொத்த இந்தியாவையும் மாற்றிக் காட்டுகிறேன்" என்று சமீபத்தில் ஒரு பொதுகூட்டத்தில் கூறினார் மோடி.

இமாலய வளர்ச்சி..முன்மாதிரி என்றெல்லாம் சொல்கிறார்களே..அப்படி என்னதான் குஜராத் வளர்ச்சி அடைந்துவிட்டது???
உண்மையை ஆராய்ந்தால்...
பா.ஜ.கவினரும் மோடியும் கூறுவது போல குஜராத் மற்றமாநிலங்கள் அளவுக்கு சராசரி வளர்ச்சியை கூட அடையவில்லை...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் 
காஷ்மீரில்-8%
தமிழ்நாட்டில்-17%
குஜராத்தில்-23%
அதாவது சராசரியாக கால்வாசி பேர் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்...

இந்த ஒரு தகவலுக்கே வாயைப் பிளந்தால் எப்படி???
மோடிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிகிறது என்கிறார்களே...
அவரை ட்விட்டெரில்  தொடர்வோர்களில் 87% பேக் ஐடிக்கள்...
நானோ கம்பனிக்காக டாடாக்கு கொடுக்கப்பட்ட நிலம் 1,1000 ஏக்கர்...சதுர அடி 10,000 மதிப்புள்ள நிலத்தை வெறும் 900 ரூபாய்க்கு 
கொடுத்துள்ளார் மோடி...பத்திரப்பதிவுக்கு ஸ்டாம்ப் டியூட்டி கூட கிடையாதாம்...

தொழிற்சாலை துவங்குவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்க தானே செய்யும்..இதில் என்ன குற்றம் கண்டீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்...
இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும்...ஆனால் நிலம் கையகப்படுத்துதலால் 15,000 விவசாயிகள் விவசாயத்தை கைவிட நேரிடும்...

இதை விட பன்மடங்கு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆதாரங்களோடு அடுத்த வாரம்...

-  வேனிற்கோ

No comments :

Post a Comment