நம் எல்லோருக்கும் தெரியும் அமெரிக்க பெரியண்ணனின் கொள்கை என்னவென்று...உலகில் எங்கு என்ன பிரச்சனை என்றாலும் வழிய வந்து "கட்டப் பஞ்சாயத்து" பண்ணுவது தான் அதன் வேலை "இந்தியாவுக்கு எதிரான அநீதியை பொறுத்துக் கொள்ளமாட்டோம்" என்று ஒரு ஒப்பன் ஸ்டேட்மன்ட் விடுவார்கள்.உடனே இந்தியாவும் நெகிழ்ந்து போய் "அண்ணனுக்கு நம்ம மேல எவ்வளவு பாசம்" என்று நெக்குருகி கண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிடுவார்கள்.அப்புறம் என்ன...அமெரிக்காவுக்கு வாழ்நாள் அடிமையாக வேண்டியதுதான்..ஆனால் இதில் அமெரிக்காவிடம் பாராட்ட வேண்டியது என்னவென்றால் "தங்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் லாபத்தில் பெரிய தலைகளுக்கு பங்கு உண்டு" என்னும் தொழில் தர்மம் தான்.
அமெரிக்கா விற்கும் அணு உலைகளில் பழுது ஏற்பட்டு விபத்து ஏற்பட்டால் அமெரிக்கா பொறுப்பேற்காது..டீசலுக்கு மானியத்தை வெட்டி பெட்ரோலை போல அடிக்கடி டீசலையும் வாராவாரம் விலை ஏற்ற வேண்டும்...தேசியமயமக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும்...காப்பீட்டு துறையை தனியார் மயமாக்க வேண்டும்...இப்படி பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு மன்மோகன் தலைமையிலான மத்திய அரசுக்கு அமெரிக்கா கோரிக்கை(ஆணை) வைத்தது .மன்மோகன் இதைத் தாமதப்படுத்தவே கடுப்பான பெரியண்ணன் தற்போது மோடி பக்கம் திரும்பியுள்ளார்.மோடி அடுத்த பிரதமர் ஆக வருவாரா?? என்று உலகளாவிய சர்வே எடுத்தால் அமெரிக்கா தான் "ஆம்" என்ற வாக்குகளை அதிகம் அளித்திருக்கும்...
ஏன் இவர்கள் மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர்??...2002இல் ஈவு இரக்கமின்றி ஒரு பக்டுகொலையை நடத்திவிட்டு எதுவும் நடக்காததுபோல் இருக்கிறாரே யார் இந் ஆள்த?? என்று விசாரித்ததில் "மோடி" என பதில் வரவே...புடிடா அவன..நிறுத்துடா தேர்தல்ல..என மோடிக்கு ஆதரவு அளித்துள்ளது.இதற்கு அத்தாட்சியாக அமெரிக்காவின் டைம் பத்திரிகை மோடி படத்தை போட்டு "MODI MEANS BUSINESS" என்று போட்டுள்ளனர்.எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை அடுத்த பிரதமர் யார் என்று இந்தியாவின் 100 முதலாளிகளிடம் எடுத்த சர்வேயில் 74 பேர் "மோடி" என வாக்களித்துள்ளனர்.இவர்கள் ஏன் மோடிக்கு வாக்களித்தனர்???...
ஒரே ஒரு எடுத்துக்காட்டு..
மேற்கு வங்கத்தில் டாட்டாவின் "நானோ"கார் தொழிற்சாலை தொடங்குவதாக இருந்தது.அதை எதிர்த்து விவசாயிகள் போராடினர்.இதை மம்தா பயன்படுத்திக்கொண்டார்.மார்சிஸ்ட் ஆட்சி கவிழ்ந்து மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார்.தங்களது நிலத்தை டாடாக்கு விற்க முயன்றதால் விவசாயிகள் எதிர்த்தனர்,அதனால்
மார்க்சிஸ்ட் கட்சி தோற்றது.
உடனே மோடி மேற்கு வங்கத்தில் புத்ததேவ் தருவதாக சொன்ன சலுகைகளை விட அதிகம் தருவதாகக் கூறி டாட்டா ஆலையை குஜராத்தில் தொடங்க இடம் தருகிறார்.விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி
டாடா தொழிற்சாலைக்கு வழங்கினார் மோடி.
இப்போது புரிகிறதா ஏன் பண முதலைகள் மோடிக்கு ஆதரவாக உள்ளனர் என்று...
மானேசர் தொழிற்சாலைக்கு இடம் கொடுத்தது,அதானி நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு நிலம் வழங்கியது,ஜியோ குளோபல் நிறுவனத்துக்கு குஜராத் அரசின் எண்ணைக் கிணற்றை தாரை வார்த்தது..இப்படி மோடியின் "விசுவாசத்திற்கு" சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
மோடி ஒரு "டெக்னிக்கலி அப்டேட்டட் திருடன் "...இணையத்தில் அவருக்கு செல்வாக்கு உயர என்னென்ன சித்து வேலைகள் செய்தார் தெரியுமா??
அடுத்த வாரம்..
- வேனிற்கோ
- வேனிற்கோ
No comments :
Post a Comment