Sunday, February 2, 2014

கூடங்குளம் 900

"அன்பிற்குரிய மாலியா மற்றும் சாஷா.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து,அமெரிக்க குழந்தைகளும் இந்திய குழந்தைகளும் பிறநாட்டுக் குழந்தைகளும் ஒன்றிணைந்து நமக்காக அணுஉலைகளும் அணு ஆயுதங்களும் அற்ற ஒரு பாதுகாப்பான உலகைக் கட்டமைப்போம்.உங்களது பெற்றோரிடம் பேசிக் கூடங்குளம் அணு உலையை மூடவும் அமெரிக்கா எந்த ஒரு அணு உலையையும் எங்கள் நாட்டில் தொடங்காதிருக்கவும் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்."
 "அணு உலை மற்றும் அணு ஆயுதங்களைக் கைவிடக்கோரி" முன்பு ஒருமுறை கூடங்குளத்திலுள்ள குழந்தைகள் ஒபாமாவின் குழந்தைகளுக்கு எழுதிய கடிதம் இது.

போராட்டத்தை முறியடிக்க, "காசு வாங்கிக்கொண்டு போராடுகின்றனர்" "பெண்களை முன்னிறுத்தி போராடும் கோழைகள்" என பல பொய்யான மற்றும் நியாயமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது,பொய் வழக்குகள் போடுவது போன்ற கீழ்த்தரமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
இப்படி பல்வேறு இன்னல்களைக் கடந்து இந்தப் போராட்டம் 900 நாட்களை எட்டிவிட்டது.எப்படி???

ஏனென்றால் இது சிறிதும் சுயநலம் கலக்காதப் போராட்டம்.கடிதத்தில் "கூடங்குளம்" திட்டத்தை மட்டும் கைவிடுமாறு அந்தக் குழந்தைகள் கூறவில்லை மாறாக மொத்த உலகையும் அணுத் தீமையில் இருந்து காத்து,நமக்கான ஒரு பாதுகாப்பான உலகைக் கட்டமைப்போம்" என்றுதான் கூறியுள்ளனர்,இந்தப் பொதுநலம் தான் இவர்களது போராட்டத்தினை உறுதியோடு செயல்படவைக்கிறது.
சுயநலமுள்ள போராட்டமாக இருப்பின் சதிகாரர்களின் சூழ்ச்சியில் சிக்கி எப்போதோ சின்னாபின்னமாகியிருக்கும் இந்த போராட்டம்.

இப்படி நேர்மையும்,அறமும் சார்ந்து பொது நலனிற்காக நடத்தப்படும் ஒரு போராட்டம்  900 நாட்களைக் கடந்து மேலும் உறுதியோடு முன்னேறுவதில் ஆச்சர்யமேதுமில்லை.
தங்களது அடுத்த நகர்வாக "தொடர் உண்ணாவிரத போராட்டத்தை"முன்னெடுத்துள்ளனர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் விரைவில் தங்களது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளனர்.கூடங்குளம் பிரச்னையை மட்டும் மனதில் வைத்து தங்களது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றிய முடிவை எடுக்காமல்..."காவேரி,முல்லைப்பெரியார்,ஈழம்,மினவெட்டு,மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் போன்ற அனைத்து முக்கிய பிரச்சனைகளையும்  கருத்தில் கொண்டு தங்களது அரசியல் ஆதரவு யாருக்கு என முடிவு செய்ய வேண்டும்.மற்ற கட்சிகளோடு இணைந்து செயல்படுவதானாலும் சரி ,தனியே புதுக் கட்சி தொடங்குவதானாலும் சரி,மேற்கூறியது போன்ற அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவே  "அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்" அரசியல் எதிர்காலத்தை நம்பிக்கைக்குரியதாக்கும்.

- வேனிற்கோ

3 comments :

  1. Each issue has both positive and negative ideas. but as far concern electricity and nuclear energy is must to fulfill our Indians need.. already due to electricity issue many Tamil entrepreneurs decided to shift their business from coimbatore to samraj nagar due to this electricity problem. btw APJ has already said that koodakulam power plant is in perfect safety condition.
    ppl said same words when kalapakkam nuclear power plant was started,but what happened? it s functioning succesfully.moreover tamilnadu irrigation nowadays mainly depend on bore-motor ( since most of the river dried in T.N) so whether it s right or wrong govt. have to take bitter decisions

    ReplyDelete
  2. to get a clear idea about "koodangulam issue" read this article....

    https://www.facebook.com/photo.php?fbid=593995823965480&set=a.560528273978902.1073741825.560507170647679&type=1

    ReplyDelete
  3. http://www.chakreview.com/Current-affairs-politics/Kudankulam-Nuclear-Power-Plant-protest-truth

    ReplyDelete