Saturday, February 22, 2014

களம்

கடந்த 2009ஆம் ஆண்டு சட்ட விரோதமாக மான்சி என்ற பெண்ணை படுக்கையறை வரை உளவு பார்த்த விவகாரத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்ட  செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அவர் யாருக்காக உளவு பார்த்தார்???
அவரது தொலைபேசி உரையாடல்களில் "சாஹேப்" என்று அடிக்கடி குறிப்பிடுகிறார்.அந்த "சாஹேப்"க்காக அல்லது அந்த சாஹேபின் கட்டளையின் பேரில் தான் இந்த உளவு வேலையை அவர் மேற்கொண்டிருப்பார் என்பது அந்த தொலைபேசி உரையாடல்களின் மூலம் தெளிவாகிறது.
2004இல் 24வயதாக இருந்தபோது மோடிக்கு நன்கு பரிச்சயமானவர்தான் இந்த மான்சி.அரசின் அழகுபடுத்தும் திட்டங்கள் பலவற்றிற்கான வடிவமைப்பாளரும் அத்தகைய திட்டங்களின் ஒப்பந்தங்களைப் பெற்றவராக இருந்தார் மான்சி.
ஆரம்பத்தில் இது போன்ற வெறும் யூகங்களின்  அடிப்படையில்தான் அந்த "சாஹேப்" என்று அழைக்கப்பட்டவர் "மோடி" தான் என்று கூறப்பட்டுவந்தது.ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை "நேரங்கெட்ட நேரத்தில் என் மகள் வெளியில் நடமாட வேண்டியிருக்கும் என்பதால் எனது மகளைக் கவனித்துக் கொள்ளும்படி எனது குடும்ப நண்பரான நரேந்திர மோடியிடம் வாய்மொழி வேண்டுகோள் வைத்தேன்" என்று கூறியது அது "மோடி" தான் என்பதை உறுதிப்படுத்தியது. 

ஆனால் வெளியாகியுள்ள 267 தொலைபேசி உரையாடல்களைக் கேட்கும் போது,ஒரு பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்தொடர்வது போல் அல்லாமல் அந்தப் பெண் மூலம் வேறு ஏதோ ஒன்று நடந்து விடாமல் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் போல உள்ளது.

இதற்கு பா.ஜா.க தரப்பில் அளிக்கப்பட விளக்கம்"அந்தப் பெண் ஒரு கிழவனை(ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷர்மா) லவ் பண்ணியதால்தான் அந்தப் பெண்ணை பாழுங்கிணற்றில் இருந்து காப்பாற்ற தான் மோடி அவ்வாறு செய்தார்" என விளக்கம் கொடுத்தனர்.ஒரு குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்ற தனது ஒட்டுமொத்த உளவுப் படையையே மோடி முடுக்கிவிட்டுள்ளார் என்பது ஏற்புடையதாக இல்லை.பதிவான தொலைபேசி உரையாடல்களில் மோடி தரப்பில் தொனிக்கும் பரிதவிப்பும்,கோபமும் அவர்களின் பதட்டத்தை காண்பிக்கிறது.குடும்ப மானத்தைக் காப்பாற்ற ஏன் பதட்டம் அடைய வேண்டும்???

அந்த 267 தொலைபேசி உரையாடல்கள் மூலம் மான்சிக்கும் மோடிக்கும்  இடையேயான நெருக்கம் பற்றி நாம் அறியமுடிகிறது.மான்சி வேறு யாருடனோ பழகுவதைக் கண்காணிக்கவே இந்த உளவு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.அவர் எங்கு செல்கிறார்,என்ன செய்கிறார்,யாருடன் பேசுகிறார் என மான்சியின் அத்தனை அசைவுகளும் உளவு பார்க்கப்பட்டன.இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தன்னை பாதிக்கும் விஷயம் இதில் அடங்கியிருந்ததால்தான் மோடி இதில் அதிக கவனம் செலுத்தினார் என்பது புலப்படுகிறது.
மோடி தன் சுயலாபத்திற்காக அரசு இயந்திரங்களை துஷ்பிரோயகம் செய்துள்ளது வெட்டவெளிச்சமாகிறது.

குஜாராத் போலி என்கௌண்ட்டர் அடுத்தவாரம்...
-  வேனிற்கோ

No comments :

Post a Comment