Saturday, March 8, 2014

நெற்றிக்கண்

சென்னை சிறுசேரி டி.சி.எஸ் வளாகத்தில் கடந்த மாதம் உமா மகேஸ்வரி என்னும் இளம் பெண் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார்.குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.சட்டம் தன கடமையை செய்தது.
இதையொட்டி எழுந்த விவாதத்தில் பெரும்பாலான ஆண்கள் முன்வைத்த குற்றச்சாட்டு "ஆறு மணிக்கு மேல ஒரு பொம்பளப் புள்ள ஏன் வெளியப் போகணும்,ஆம்பளைக்கு சமமா நாங்களும் வேலை பார்ப்போம்ன்னு  போன இப்படிதான் ஆகும்".சில கம்பனிகளும் இந்த சம்பவத்தை தொடர்ந்து 
பெண்களின் வேலை நேரத்தை குறைத்து ஆறு மணிக்கே அவர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தது.
"இரவில் மட்டும்தான் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்களா என்ன??இரவு என்பது பெண்களுக்கு தடை செய்யப்பட்ட ஒரு நேரமா என்ன???...இரவை ரசிக்க...இரவில் பயணிக்க அவர்களுக்கு உரிமையில்லையா என்ன??....ஆண்கள் தானே கற்பழிக்கிறார்கள்..அப்படி என்றால் ஆண்கள் இனி மாலை ஆறுமணிக்கு மேல்/இரவில் வெளியே வரக்கூடாது.பெண்கள் இரவில் வரலாம் என்று சட்டம் போட வேண்டியாதுதானே.சும்மா இருப்பார்களா நம் ஆண்கள்?உடனே "உரிமை" அது இதுன்னு கொடி பிடிப்பார்கள்...தங்களுக்கு ஒரு நியாயம்,ஊருக்கு ஒரு நியாயமா..குற்றம் செய்தவனை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்லும் அழுக்கு படிந்த மனநிலை நமது...

அசாம் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ராகுல் காந்திக்கு முத்தமிட்ட பெண் கவுன்சிலரை அவரது  கணவரே எரித்து கொலை செய்துள்ளார்.
முத்தமிடுதல்,கட்டிப்பிடித்தல்,பைக்கில் ஆணோடு பயணம் செய்தல்,ஆணோடு நட்புறவோடு பழகுதல் போன்றவை என்ன பாவச்செயல்களா??...இதனால் கற்பு பொய் விடுமா???,...கற்பு என்பது ஆண்களைப் பொருத்தவரை "அடங்கி நடத்தல்" என்பதா???...கட்டிப்பிடித்தால்,முத்தமிட்டால் கற்பு போய்விடும் என்று கருதுவதை விட மூடத்தனம் என்னவாக இருக்க முடியும்???...கற்பு என்ற ஒன்றே கிடையாது...அப்படி இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டுமல்லவா???.ஆண்களுக்கு என்று கட்டுப்பாடு எதுவும் கிடையாது.ஆண்கள் என்ன வேண்டுமானலும் செய்யலாம்...ஆனால் பெண்கள் செய்யும் செயல்களை "கற்பு,பத்தினி" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இவர்கள் கட்டுப்படுத்துவார்களாம் ...கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல...அது மனம் தொடர்புடைய விஷயம்...

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் பெண்களும் சக பெண்களை இதே அளவுகோல்களை வைத்து அளவிடுவதுதான்.பெண்களுக்கு நம் உரிமைகள் பறிபோகிறது என்பதே புரிவதில்லை.கணவனுக்கு,பெற்றோருக்கு செய்யும் தொண்டு,தியாகம்,பாசம்,நேசம்,காதல் என்று கூறி அதை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.முதலில் பெண்கள் தங்களுக்கான உரிமைகள் எதுவென்றுப் புரிந்துகொள்ளல் வேண்டும்.பின் தங்களுக்கான உரிமை மீட்கும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடல் வேண்டும்.
ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் எனவோ...பெண்கள் உயர்ந்தவர்கள் எனவோ நிரூபிக்க யாரும் பிறப்பெடுக்கவில்லை.இருவரும் ஒன்றிணைந்து ஒருவரையொருவர் சமமாக நடத்தி வாழும் வாழ்வே அர்த்தம் பொதிந்தது.
-வேனிற்கோ

No comments :

Post a Comment