Monday, April 7, 2014

பல நாள் திருடன்


இரவிலும் பிரச்சாரம் செய்யலாம் என்ற தேர்தல் கமிஷன்   அனுமதிக்கு பிறகு மேலும் முனைப்போடு இரவு பகல் என்று பாராமல் பிரசாரங்களில் பரபத்துக்கொண்டிருகின்றன எல்லா அரசியல் கட்சிகளும்.இந்த பரபரப்பான சூழலில் "பழைய கிழவி கதவத் திறடி" என்பது போல் பழைய பிரச்சனை ஒன்றை தூசி தட்டி எடுத்து பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ கும்பக்களின் முகத்திரையை கிழித்துத்  தொங்க விட்டுள்ளது ஒரு இணையதளம்.
1992ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை "ஆபரேஷன் ஜன்மபூமி" என்ற ஸ்டிங் ஆபரேஷன் மூலம் ஆதரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளது "கோப்ரா போஸ்ட்" இணையதளம்.
அயோத்தி இயக்கம் என்கிற தனது புத்தகத்தின் ஆராய்ச்சி சம்மந்தமான ஆசிரியர் போல் தன்னை காட்டிக்கொண்டு, கோப்ராபோஸ்ட் இணை ஆசிரியர் கே ஆஷிஷ் உ.பி. , ஜெய்ப்பூர் , அவுரங்காபாத், மும்பை மற்றும் குவாலியர் அயோத்தி , பைசாபாத் , கோவில்களுக்கு , லக்னோ, கோரக்பூர் , மதுரா, மொராதாபாத் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து யார் பாபர் மசூதி இடிப்பு ஆபரேஷனில் பங்குகொண்ட அந்த 23 பேரிடம் நேர்காணல் நடத்தி இரகசியமாக அவர்களின் உரையாடல்களை பதிவு செய்தார்.
பாபர் மசூதி வழக்கை விசாரித்த லிபேரன் கமிஷன் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட 68 பேரில் இந்த 23 பேரும் அடக்கம்,அந்த 23 பேரின் விவரம் சம்பத் ராய் பன்சல்,ராம்ஜி குப்தா,பிரகாஷ் ஷர்மா,ரமேஷ் பிரதாப் சிங்,வினய் கடியார் ,ஜைபான் சிங் பவேயா,தரமென்ற சிங் குர்ஜாஅமர், பி.எல்.ஷர்மா பிரேம்,பிரிஜ் பூஷன் ஷரன் சிங்,சாத்வி உமா பாரதி, கல்யாண்  சிங்,லல்லு சிங்,ஜெய் பகவான் கோயல்,பவன் பாண்டே, சந்தோஷ் துபே,சதீஸ் பிரதான்,மோரேஷ்வர் சாவே,சுவாமி சச்சிதானந்த்  சாக்ஷி மகாராஜ்,மகந்த் ராம் விலாஸ் வேதாந்தி,சாத்வி ரிதம்பரா,மகந்த் அவைத்யானத்,ஆச்சார்யா தர்மேந்திரா சுவாமி ரித்ய கோபால் தாஸ். 

கோப்ரா போஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளி வந்துள்ள திடிக்கிடும் தகவல்கள்:

பாபர் மசூதி இடிப்பு ஏதோ உணர்சிகரமான சம்பவம் அல்ல திட்டமிட்டு சங்க பரிவார் ஆட்களை முன்னாள் ராணுவ அதிகாரிகள் மூலமாக பயிற்சியளித்து பாபர் மசூதியை இடித்துள்ளனர்.

இதற்கு தனியே தற்கொலைப் படையினரையும் உருவாக்கியுள்ளனர்.

ஒரு ராணுவப் பயிற்சிக்கு இணையாக உயரமான கட்டடங்களில் ஏறுவதற்கு,ஆயுதங்களைக் கொண்டு கட்டிடத்தை இடிப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

உளி,சுத்தியல்,கடப்பாரை உள்ளிட்ட கட்டடங்களை இடிக்கத் தேவையான பொருட்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பப்பட்டன.

எல்லா முயற்சியும் தோல்வியில் முடிந்தால்  "டைனமைட்டை" வைத்து தகர்க்க ஏற்ப்பாடுகள் தயார் நிலையில் இருந்தது.

பத்தடமான சூழ்நிலையை தக்க வைக்க அயோத்தியில் முன்னமே கலவரத்திற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு சில உயிர்கள் பலியாவதையும் திட்டமிட்டிருந்தனர்.

இடித்து தரைமட்டமாக்கப்பட வேண்டும் என்ற முடிவோடு கட்டிடக்கலை வல்லுனர்கள் மற்றும் பொறியாளர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் பேரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

உ.பி முதல்வர் கல்யாண் சிங் மற்றும் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவிற்கு பாபர் மசூதி இடிக்கப்பட உள்ளது முன்னரே தெரியும்.

வினய் கட்டியார்,எல்.கே அத்வானி,உமா பாரதி,ஹச்.வ. சேஷாத்ரி உள்ளிட்ட பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கலந்து கொண்ட ரகசிய கூட்டம் ஹனுமான் பாகில் நடத்தப்பட்டது.

பாபர் மசூதியில் கண்டெடுக்கப்பட்ட ராமர் சிலை அதிசயமான நிகழ்வு அல்ல,முன்னரே திட்டமிட்டு பல வருடங்களுக்கு முன் பாபர் மசூதியில் புதைக்கப்பட்டு பின்னர் எடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்டவர்களே தங்கள் வாயால் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளதால் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.இதில் பெரும்பாலானோர் பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவான ஆர்.எஸ்.எஸ் என்பதால் தேர்தல் நேரத்தில் இது அவர்களுக்கு பெரும் பின்னடைவைத் தரக்கூடும்.
கோப்ரா போஸ்ட்டை தடை செய்யக் கூறி எலக்ஷன் கமிஷனிடம் புகார் அளித்துள்ளது பா.ஜ.க.ஆனால் வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது.சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல இது பரவி வருகிறது.பா.ஜ.க எதிர்பாராத கடைசி நொடி தாக்குதல் இது.
அதன் செல்வாக்கு சரிவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
-  வேனிற்கோ

No comments :

Post a Comment